வள்ளலார் நுால் வெளியீடு
செந்துறை:செந்துறையில் கிள்ளிவளவன் எழுதிய வள்ளலாரின் மரணம் இல்லாத பெருவாழ்வின் குண்டம் ரகசியம் நுால் வெளியீட்டு விழா நடந்தது. எழுத்தாளர் விக்னேஷ்வரன் தலைமை வகித்தார். நத்தம் வனச்சரக அலுவலர் புவியரசன், எழுத்தாளர் மணி அற்புதராஜ், குறள் நெறிக்கூட ஒருங்கிணைப்பாளர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதிநிறுவன நிர்வாக இயக்குநர் நாகராஜ் பெரியசாமி பிள்ளை நுாலை வெளியிட்டு வள்ளலார் போதித்த ஆன்மநேயம், அன்பின் தத்துவம் குறித்து பேசினார்.