உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் வன்னிகாசூரன் வதம்; முருகன் கோயில் நடையடைப்பு

பழநியில் வன்னிகாசூரன் வதம்; முருகன் கோயில் நடையடைப்பு

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாக உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் நடந்த நவராத்திரி விழா வன்னிகாசூரன் வதம் அம்பு எய்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதை யொட்டி முருகன் கோயில் நடை சாத்தப்பட்டு காலை 11:30 மணி முதல் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக். 3 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை தொடர்ந்து நேற்று பழநி முருகன் கோயிலுக்கு காலை 11:30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை . அடிவாரத்திலே பக்தர்கள் நிறுத்த தகவல் தெரியாது வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதை தொடர்ந்து பழநி முருகன் கோயிலில் மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை , மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்ற நிலையில் மதியம் 3:15 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.இதன் பின் அங்கிருந்து பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. புலிப்பாணி ஆசிரமத்தில் இருந்து சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் ,தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு பழநி கோதை மங்கலம் கோதீஸ்வரர் கோயில் முன்பு வன்னிகாசூரன் வதம் நடந்தது. சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் மூலம் அம்பு எய்தல் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய,வேல் முருகன் கோயில் செல்ல அங்கு அர்த்த சாம பூஜை நடைபெற்றது. அம்பு எய்தும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ