உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு விடிவு

வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு விடிவு

வடமதுரை: வடமதுரை வி.ஏ.ஓ., அலுவலகம் பஸ் ஸ்டாப் அருகில் செயல்பட்டு வந்தது. ஓட்டு கூரை கட்டடமான இது 2007ல் பெய்த கனமழையால் சேதமாக வடக்கு ரத வீதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பிற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இப்பகுதி சிறுநீர் கழிக்கும் பகுதியாக பயன்படுத்தப்படும் நிலையால் துர்நாற்றம் வீசியது. சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படும் நிலையும் இருந்தது. இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதையடுத்து வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் இருந்த குப்பை அகற்றப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இரும்பு கதவு பொருத்தி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்த பிரச்னைகளுக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை