மேலும் செய்திகள்
தலைமறைவு குற்றவாளிகள் அக்., 22ல் ஆஜராக உத்தரவு
17-Sep-2025
திண்டுக்கல்:வழக்கு விசாரணைக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வத்தை 54, போலீசார் கைது செய்தனர். மதுரைமாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் மதுரை சிலைமான் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2012 மார்ச் 12 ல் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் விடுதியில் கூட்டாளிகளுடன் இருந்த வரிச்சியூர் செல்வத்தை வடக்கு போலீசார் உதவியுடன் சிலைமான் போலீசாார் கைது செய்ய சென்றனர். அப்போது வரிச்சியூர் செல்வம், கூட்டாளிகளான கேரளாவை சேர்ந்த சினோஜ், அஜிஸ், வர்கீஸ் ,போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் சுட்டதில் சினோஜ் இறந்தார். இது தொடர்பாக வரிச்சியூர் செல்வம் , கூட்டாளிகள் மீது திண்டுக்கல் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதன் விசாரணையில் அவர் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார், வத்தலக்குண்டு அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரித்த நீதிபதி தினேஷ்குமார், அக். 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
17-Sep-2025