உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடு பள்ளத்தால் தடுமாறும் வாகனங்கள்

ரோடு பள்ளத்தால் தடுமாறும் வாகனங்கள்

குடிநீரின்றி அவதிதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சில நேரங்களில் தண்ணீர் இன்றி உள்ளது. இதனால் மக்கள் குடிநீருக்காக அலைகின்றனர். எப்போதும் தண்ணீர் இருக்க வழி காண வேண்டும்.முத்துக்குமார், திண்டுக்கல்.............-----------சேதமான மின் பெட்டிதிண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதமடைந்தது தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் மீட்டர் பெட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயலட்சுமி, திண்டுக்கல்.............------------பள்ளத்தால் விபரீதம்திண்டுக்கல் -பழநி ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதை அறிய குச்சியை நட்டு வைத்துள்ளனர் .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். சிந்து, திண்டுக்கல்..........------------பாலத்தில் விரிசல்வடமதுரை செங்குறிச்சி ரோட்டில் வள்ளி கரடு பிரிவு அருகில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தாக உள்ளது. வாகனங்களில் செல்வோர் பதறுகின்றனர். இதனை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் முன் வர வேண்டும். -- பாண்டியன், வடமதுரை.............------------சேதமான ரோடுபழநி - பழைய தாராபுரம் ரோடு மானுார் சுவாமி கோயில் அருகில் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் கிழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர் .இதை சரி செய்ய நடவடிக்கை வேண்டும். ரவி, பழநி............------------சாக்கடையில் அடைப்புதிண்டுக்கல் மொட்டணம்பட்டி ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்பு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதை கருதி சாக்கடையை சரி செய்ய வேண்டும். முத்துவேல், திண்டுக்கல்..........-------------அள்ளப்படாத குப்பைதிண்டுக்கல்- திருச்சி ரோட்டில் குப்பை குவிந்துள்ளது .இதை பல நாட்களாக அள்ளாமல் உள்ளனர். .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுற்றுசூழலும் பாதிக்கிறது .சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் அகற்ற வேண்டும். முருகன், திண்டுக்கல்..............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை