டோல்கேட்டில் அணிவகுத்த வாகனங்கள்
கொடைரோடு,: தீபாவளியை முன்னிட்டு விடுமுறைக்காக வட மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர். நேற்று விடுமுறை முடிந்தநிலையில் சொந்த ஊர் வந்த மக்கள் வெளியூர் செல்வதற்காக மதுரை வழியாக வட மாவட்டங்களை நோக்கி கார்களிலும்,பஸ்களிலும் பயணித்தனர். இதனால் கொடைரோடு டோல்கேட்டில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மணிக்கணிக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.