வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹி..ஹி..
கொடைக்கானல்:பள்ளி காலாண்டு விடுமுறையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் முகாமிட்டதால் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குளு குளு நகரான கொடைக்கானலில் சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் இதமான சூழல் நிலவி வருகிறது. ஒருபுறம் சனிக்கிழமை விடுமுறை ,பள்ளி காலாண்டு விடுமுறையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினம் முதல் இங்கு முகாமிட்டனர். நேற்று காலை முதல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெருமாள்மலை --- வெள்ளி நீர்வீழ்ச்சி இடையே அரை மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுற்றுலா பயணிகள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வனச் சுற்றுலாத்தலங்களை பார்த்து ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் , ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஹி..ஹி..