உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரத்தில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

ஒட்டன்சத்திரத்தில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லெக்கையன் கோட்டை செம்மடைப்பட்டி இடையே வாகனங்கள் நெரிசலில் சிக்கியதால் தொலைதூர நகரங்களுக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர்.பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியான வாகனங்கள் ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் சென்றன. லெக்கையன்கோட்டை செம்மடைப்பட்டி இடையே ரோடு விரிவாக்கம்,பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த இடத்தை கடந்து செல்ல வாகனங்களுக்கு அதிக நிமிடங்கள் பிடித்தது. வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டதால் நெரிசலில் சிக்கின. குறைப்பதற்கு ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் வேடசந்துார் ரோட்டில் திருப்பி விடப்பட்டு தாடிக்கொம்பு வழியாக செல்ல போலீசார் அறிவுறுத்தினர். சில மணி நேரங்கள் கடந்த பின்பு போக்குவரத்து சீரானது. இதை தொடர்ந்து லெக்கையன்கோட்டை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. தொலைதுா ரங்களுக்கு செல்லும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ