உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து குறைவால் வெண்டை விலை உயர்வு

வரத்து குறைவால் வெண்டை விலை உயர்வு

ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை ஒரே வாரத்தில் கிலோவிற்கு ரூ.12 அதிகரித்து ரூ.32 க்கு விற்றது.ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார் மற்றும் சுற்றிய பகுதிகளில் வெண்டைக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன் வெண்டைக்காய் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.20 க்கு விற்றது. தற்போது அறுவடை குறைந்துள்ள நிலையில் மார்க்கெட்டுக்கு வரத்து பாதியாக குறைந்தது. இதன் காரணமாக விலை ஏற்றமடைந்து நேற்று கிலோ ரூ.32க்கு விற்றது. ஒட்டன்சத்திரம் கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில்,காற்றடி காலம் தொடங்க உள்ள நிலையில் வரத்து குறையும் என்பதால் விலை இன்னும் அதிகரிக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை