விகான் 3.0 செயல்முறை பயிற்சி
திண்டுக்கல் : திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் விகான் 3.0 அவசர சிகிச்சை துறையின் கான்பிரன்ஸ் செயல்முறை பயிற்சி நடந்தது. அவசர சிகிச்சை முதன்மை மருத்துவர் கார்த்திகேயன் வரவேற்றார். திண்டுக்கல் கலெக்டர் சரவணன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். அப்போது அவர்,''வடமலையான் மருத்துவமனை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை செய்து வருகிறது. இதுபோன்ற செயல்திறன் பயிற்சிகள் அரசு , தனியார் மருத்துவமனை இணைந்து செய்வதினால் மருத்துவத்துறை பயிலும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் '' என்றார். மருத்துவமனை டைரக்டர் ஆப் மெடிக்கல் சர்வீஸ் டாக்டர் சுந்தர்ராஜன் விகான் 3.0 வை துவங்கி வைத்தார்.