உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / என்.பி.ஆர்.,ல் வித்யூட்- 2கே24

என்.பி.ஆர்.,ல் வித்யூட்- 2கே24

நத்தம் : -நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மேலாண்மைத் துறை சார்பாக மாநில அளவில் கல்லுாரிகள் இடையே வித்யூட்-2கே24 போட்டிகள் நடந்தது. மாணவி ஸ்வாதி வரவேற்றார். பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன் தலைமை வகித்தார். கல்வி இயக்குனர் கார்த்திகைபாண்டியன் பேசினார். 25 கல்லூரிகளை சார்ந்த 320 மாணவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி சாரநாதன் பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. 2ம் இடத்தை திருச்சி ஹால்மார்க் மேலாண்மை கல்லுாரி கைப்பற்றியது. என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மேலாண்மைத் துறை தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி