உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒரு மாதமாக வரல குடிநீர் கிராமத்தினர் தவிப்பு

ஒரு மாதமாக வரல குடிநீர் கிராமத்தினர் தவிப்பு

நிலக்கோட்டை: காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் கிராமத்தினர் பரிதவிக்கின்றனர். நரியூத்து ஊராட்சி காட்டுநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குழாயில் ஏற்பட்ட உடைப்பால் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. ஆழ்துளை கிணறு மூலம் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் அருகில் உள்ள தோட்டங்களுக்கு டூவீலர்களில் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குழாயில் ஏற்பட்ட உடைப்பையும் சரி செய்ய வில்லை. டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகிக்க கிராமத்தினர் கோரியும் டிராக்டர் மூலமும் குடிநீர் வழங்கவில்லை. நாள்தோறும் குடி நீருக்கு பெரிய போராட்டமாக இருப்பதால் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ