உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உள்ளாட்சி மனைப்பிரிவு அங்கீகாரத்தில் விதிமீறல் தேவை ஆய்வு ; போதிய வசதியின்றி அனுமதி வழங்குவதாக புகார்

உள்ளாட்சி மனைப்பிரிவு அங்கீகாரத்தில் விதிமீறல் தேவை ஆய்வு ; போதிய வசதியின்றி அனுமதி வழங்குவதாக புகார்

சின்னாளபட்டி : திண்டுக்கல மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் அதிகரித்து வருகிறது. மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது. காலியிடங்களை குடியிருப்பு பகுதிகளாக வரன்முறை படுத்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர ஊரமைப்பு பிரிவில், மனைப்பிரிவு அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது. இதற்கான விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட நிலத்தின் 10ல் ஒரு பகுதி நிலம் உள்ளாட்சி பிரிவுகளுக்கு தானமாக வழங்கப்படுகிறது. 23 அடி அளவிற்கு குறைவில்லாத அகலத்தில் ரோடு, சாக்கடை , மின் கம்பம் போன்றவை அமைக்க 3ல் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்படுகிறது. ரோடு தவிர பூங்கா, தண்ணீர் தொட்டி, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இடம் வழங்க வேண்டும். இதன்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலி இடத்தை தான செட்டில்மென்ட் மூலம் ஒதுக்கீடு செய்து வழங்குகின்றனர். ஆனால் வழக்கம்போல் அரசு சொத்துக்களை பராமரிப்பதில், உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியப்போக்கால் குளறுபடி , சம்பந்தப்பட்ட பகுதியில் வசிப்போர் பாதிப்படையும் அவலமும் நீடிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் உரிய கட்டமைப்பு பல ஆண்டுகளாகவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. வருவாய் இல்லாத கட்டமைப்பு, நிதி ஆதாரம் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி சம்பந்தப்பட்ட காலியிடங்களை பராமரிக்கவோ, கண்காணிக்கவோ உள்ளாட்சி அமைப்புகள் ஆர்வம் காட்டுவதில்லை. இது தவிர வணிக வளாகங்களுக்கான அனுமதியின் போது கார் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகத்தில் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கவனிப்பு செல்வாக்கு காரணமாக இது போன்ற கட்டமைப்புகளை கண்டு கொள்வதில்லை. இட மதிப்பீட்டை குறைத்து அனுமதி வழங்கப்பட்ட முறைகேடுகளும் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி வழங்கலில் குடியிருப்பு, வணிக கட்டடங்கள், காலியிட ஒதுக்கீடு, பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாவட்ட நிர்வாகம் இவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன்வர வேண்டும். ........... --- மறுதணிக்கை அவசியம் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு சொத்துக்களைப் பராமரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். அரசியல், பண பலத்தால் அதிகார துஷ்பிரயோகம் அதிகரித்து வருகிறது. மின் கம்பம் மூலம் வழங்கப்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் மட்டுமே மனையிடங்களில் வீடு வாங்குவோர் மின்சார வசதி பெற ஏதுவாக இருக்கும். இது தவிர சாக்கடையுடன் அமைக்கப்படும் ரோடுகள் மட்டுமே போதிய கட்டமைப்பு கொண்டதாக இருக்கும். இவற்றில் பெரும்பாலான விதிகள் பின்பற்றப்படுவதில்லை. பல இடங்களில் சோலார் மின்விளக்குகளுடன் பெயரளவில் ரோடு அமைத்து அனுமதி பெற்று விடுகின்றனர். 4 ஆண்டுகளில் ஊராட்சிகள் மட்டுமின்றி பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் இதே அவலம் ஏற்பட்டுள்ளது. வசதிகள், இட ஒதுக்கீட்டு அளவு போன்ற அம்சங்களை உறுதிப்படுத்த இவற்றை மறுதணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அரசியல், அதிகார 'செல்வாக்கு' மூலம் பல உள்ளாட்சி அமைப்புகளின் காலியிடங்கள் ஆக்கிரமிப்பு, போலி ஆவணங்கள் தயாரித்து நிரந்தர உரிமையாளர்களாகவும் மாறி உள்ளதாக புகார்கள் தொடர்கின்றன. இந்த அவலங்களை தடுக்க அரசின் கடிவாள நடவடிக்கைகள் அவசியம். மனோகரன், பா.ஜ., வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர், ஆத்துார். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ