உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து மாற்றம் விதி மீறும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

பழநியில் பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்து மாற்றம் விதி மீறும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

பழநி: பழநி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பஸ் ஸ்டாண்ட் பகுதி போக்குவரத்து மாற்றங்கள் உட்பட பல்வேறு மாற்றங்களை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். பழநி பஸ் ஸ்டாண்டுக்கு வரும் திண்டுக்கல், தேனி, மதுரை, ஆயக்குடி, சத்திரப்பட்டி பஸ்கள் மயில் ரவுண்டானா சிக்னலை தாண்டி பஸ் ஸ்டாண்ட் வடபுறம் உள்ள நுழைவுவாயில் வழியாக பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும். இது போல் இந்த பஸ்கள் கிழக்கு காந்தி சிலை வாயில் வழியாக வெளியேற வேண்டும். திண்டுக்கல் ரோடு வழியாக அடிவாரம் செல்லும் வாகனங்கள் காந்தி சிலை, தேவர் சிலை வழியாகவும் கோவை, திருப்பூர், ஈரோடு, பஸ்கள் தாராபுரம் சாலை வழியாக வேல்ரவுண்டானாவை தாண்டி குளத்து ரோடு பகுதியில் மேற்கு புறம் உள்ள நுழைவுவாயில் வழியாக பஸ் ஸ்டாண்ட் வர வேண்டும். இதே வழியில் நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி, மானூர், கீரனுார் வழியாக வரும் நகர பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். இந்த பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வடக்கு பகுதியில் செல்லம் ஓட்டல் எதிரே உள்ள நுழைவு வாயில் வழியாக வெளியே செல்ல வேண்டும். என கூறப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டோரம் நிறுத்தும் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ள னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை