உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

வேடசந்தூர்: குடகனாறு அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது.ஆத்தூர், தாடிக்கொம்பு, வேடசந்தூர் வழியாகச் செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை உள்ளது. பிரதான கிளை வாய்க்கால்கள் மூலம், திண்டுக்கல், கரூர் மாவட்டங் களில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது. நேற்று பாசனத்திற்கான தண்ணீரை திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து திறந்து வைத்தார். பாசனத்திற்கான இந்த தண்ணீர், நேற்று (27.4.25) முதல் ( 25.7.25) முடிய 90 நாட்களுக்கு ஒரு வாரம் விட்டு, ஒரு வாரம் திறந்து விடப்பட உள்ளது. நங்காஞ்சியாறு வடிகால் கோட்ட செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் தனசேகர், குடகனாறு உதவி பொறியாளர்கள் மகேஸ்வரன், முருகன், தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ