உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பாசனத்திற்கு பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

 பாசனத்திற்கு பாலாறு பொருந்தலாறு அணை நீர் திறப்பு

பாலசமுத்திரம்: பழநியில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. பழநி சுற்றுப்பகுதிகளில் வரதமா நதி அணை, பாலாறு- பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை உள்ளன. நேற்று (டிச.19 ) முதல் 2026 ஏப். 17 வரை 120 நாட்களுக்கு பாலாறு-பொருந்தலாறு அணையில் 207.36 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாடாகுளம் பாசன பரப்பு பகுதிகளில் 844 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம், உதவி பொறியாளர் சங்கரநாராயணன், விவசாயிகள் பங்கேற்றனர். தற்போது அணையின் 56.76 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 75 கன அடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 32 கன அடி நீர் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ