மேலும் செய்திகள்
தி.மு.க., இளைஞரணி பேச்சுப்போட்டி
14-Oct-2024
வேடசந்துார், : தமிழக துணை முதல்வர் உதயநிதி நாளை நத்தத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க உள்ளார். அதற்காக இன்று (ஞாயிறு) மாலையே திண்டுக்கல் வர உள்ளார். இதற்காக வேடசந்துார் அய்யர் மடத்தில் இன்று மாலை வரவேற்பு தரும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தை அமைச்சர் சக்கரபாணி, எம் எல் ஏ., காந்தி ராஜன் பார்வையிட்டனர்.கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, சீனிவாசன், சுப்பையன், பாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், செயற்குழு உறுப்பினர் ராஜாமணி, நகர செயலாளர்கள் கார்த்திகேயன், சின்னான், நிர்வாகிகள் கவிதாமுருகன், நாகப்பன்,மருதபிள்ளை, கார்த்தி, காங்., நிர்வாகிகள் சாமிநாதன், சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14-Oct-2024