உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாகன எண்களை மட்டுமே வைத்து அபராதம் விதிக்கும் போலீசார்; சோதனை இல்லாமல் அபராதம் விதிப்பதாக வாகனஓட்டிகள் புகார்

வாகன எண்களை மட்டுமே வைத்து அபராதம் விதிக்கும் போலீசார்; சோதனை இல்லாமல் அபராதம் விதிப்பதாக வாகனஓட்டிகள் புகார்

திண்டுக்கல்: வாகன சோதனைகள் ஏதும் பெரிதாக நடத்தாமல் வாகன எண்களை மட்டுமே வைத்து போலீசார் -சலான்கள் மூலம் விதிக்கப்படும் அபராதத்தொகை பல ஆயிரங்களில் வருவதாகவும், அதற்கான குறுஞ்செய்திகள் கூட அலைபேசிக்கு வருவதில்லை என வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் கையால் எழுதிய ரசீது வழங்கி அபராதம் விதித்து வந்த காலம் மாறி வருகிறது. அதற்கு பதிலாக -சலான்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய முறை எப்படி செயல்படுகிறது என்பது இன்னும் நிறைய பேருக்கு தெரிவதில்லை. போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.இந்த புதிய முறையில் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பதற்காக சாலையில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை, இந்த சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கும். இதில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் கண்டறியப்பட்டு அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்து -சலான்கள் வழங்கப்பட்டு வருகின்றனஆனால் பல மாவட்டங்களில் இதுபோன்று இல்லை. இதனால் போலீசார் கையில் வைத்துள்ள கையடக்க இயந்திரத்தின் மூலம் டூவீலரின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்து அவர்களது அலைபேசிக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் பல தகவல்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக அலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி வருவதே இல்லை என தெரிவிக்கின்றனர்.பல வாகனங்களுக்கு எப்போதோ எடுத்து வைத்த புகைப்படங்களை அப்லோடு செய்தும் பல்வேறு வகையிலான ஆன்லைன் அபராதங்களையும் கண்மூடித்தனமாக போக்குவரத்து போலீசார் விதிப்பதாகவும் புகார் எழுகிறது. ஒவ்வொரு வாகனத்தின் மீதும் குறைந்தபட்சம் 100 சலான்கள் நிலுவையில் உள்ளன. சில நேரங்களில் வாகனங்களின் மதிப்பை விட அதிக தொகையை செலுத்த வேண்டிய சூழல் கூட ஏற்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு இவ்வளவு தொகை என இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் முறையாக போலீசார் பொதுமக்களின் ஆவணங்களை சோதனை செய்வது போன்ற பணிகளில் ஈடுபடாமல் இலக்கை எட்ட வாகன எண்களை போட்டோ எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். சாமன்ய மக்கள் மட்டுமல்ல சில போலீசார்காரர்களுமே இதுபோன்ற அபராத தொகை வருவதாக தெரிவிக்கின்றனர். வாகனங்களை எடுக்காமலே சீட்பெல்ட் போடவில்லை, ெஹல்மெட் அணியவில்லை என அபராதம் வருகிறது. ......முறைப்படுத்தலாமே போலீசார் தற்போது வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை சோதனையிடுவதில்லை. ஆனால் வானத்திற்கு அபராத தொகை எப்படி விதிக்கப்படுகிறது என்பதே தெரியவில்லை. வாகனத்தை விற்கும்போது செயலி வழியாக சோதனை செய்தால் சலானில் சீட் பெல்ட் அணியவில்லை என ரூ.100 , அதோடு லீகல் தொகை ரூ.219,ஜி.எஸ்.டி., ரூ.39 என ரூ.358 விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவ்வப்போது அபாரதம் விதிக்கப்பட்டு ரூ.25 ஆயிரம் வரை காட்டுகிறது. இந்த அபராத தொகையை செலுத்தவில்லையெனில் வாகனங்களை விற்பனை செய்யும்போது சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் -சலான்கள் நிலுவையில் இருந்தால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் என்.ஓ.சி., எனப்படும் தடையில்லா சான்றிதழ் பெற முடியாமல் போகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முறைப்படுத்த வேண்டும். - சதீஸ்குமார், பா.ஜ.,முன்னாள் நகர தலைவர், திண்டுக்கல்..............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ganesh Kesavamoorthy
மே 23, 2025 00:58

என்னுடைய வண்டி நம்பரை வேறு ஒருவர் அவருடைய வண்டிக்கு பயன்படுத்துகிறார். அதற்கும் அபராத ரசீது மற்றும் குறுந்தகவல் எனக்கு வருகிறது. இதைப்பற்றி போக்குவரத்து காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும் இங்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். சரி என்று அபராதம் விதித்த காவல்துறை அலுவலர் வேலை செய்யும் காவல் நிலையத்திற்கு போன் செய்தால் அபராதம் விதித்த காவலரின் பெயரில் இங்கு யாருமே வேலை செய்ய வில்லை என்று கூறுகிறார்கள். சரி என்று ஆன்லைனில் எனது புகாரை பதிவு செய்தேன். அதற்கும் பலனில்லை. எனது வண்டியின் நம்பரில் மட்டும் இரண்டு அபராத தொகை ரசீதுகள் தவறாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.


MUTHUKUMAR C
மே 22, 2025 12:42

இப்படி வசூல் பண்ணி மக்களுக்கு சேவை பண்ணும் விளம்பர மாடல்.


Durai V
மே 22, 2025 11:37

இலவசமா கொடுக்கறதுன்னா எங்கிருந்து கொடுக்க முடியும். இப்படித்தான் நம்ம பணத்தை பிடுங்கி நம்மளுக்கே திருப்பி கொடுப்பாங்க.


saravanan r
மே 21, 2025 09:13

எதுக்கு இந்த டார்கெட் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு மக்களிடம் கொள்ளை அடிக்கிறது இந்த அரசாங்கம்


Venkat
மே 20, 2025 20:32

இன்னும் ஒரு வருடம் தான் தேர்தலுக்கு இருக்கு. ஓட்டுக்காக சும்மா அள்ளி விட்ட இலவச திட்டங்களை நிறைவேத்தனும்னா இந்த மாதிரி பண்ணினா தான் சமாளிக்க முடியும். பாவம் அப்பாவி பொதுமக்கள்...


Palaniappan Valliappan
மே 20, 2025 20:21

திருவள்ளூர் போக்குவரத்து போலீசார் , அந்த ஊர் ஹைவே ரோட்டில் டீக்கடை அருகில் நிற்கும் வாகனத்தின் நம்பர்களை போட்டோ எடுத்து ஆன்லைன் அபராதம் விதித்து அவர்களது டார்கெட்டை முடிக்கிறாரகள். மிகவும் கடுமையான சட்டம் மட்டும் அமல்.


முக்கிய வீடியோ