உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த சுணக்கம்: அகற்றப்படாத கட்சிகளின் கொடிக்கம்பங்கள்... : நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள்

ஏன் இந்த சுணக்கம்: அகற்றப்படாத கட்சிகளின் கொடிக்கம்பங்கள்... : நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள்

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய சாலைகள், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சில நாட்களுக்கு முன் கொடிக்கம்பங்கள் கண்துடைப்பாக அகற்றப்பட்டன. ஊரக பகுதிகளில் உள்ள கிராம சாலைகள் , உள்ளாட்சி பகுதிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள குறிப்பிட்ட கட்சியின் கம்பங்களை மட்டும் அகற்றிவிட்டு இதர கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றாமல் உள்ளனர். இதனால் கட்சியினரிடையே பாகுபாடு காட்டும் அதிகாரிகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் சில கொடிக்கம்பங்களை அகற்றும் போது கட்சியினர் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் அதிகாரிகள் மன உளைச்சல் அடைகின்றனர். இதனால் கொடிக்கம்பம் அகற்றும் பணிகள் சுணக்கம் அடைந்து உள்ளதாக தெரிகிறது. இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி ஊரகப் பகுதிகளில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதன் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ