உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த அலட்சியம் : போஸ்டர்களால் அலங்கோலமாகும் நிழற்குடைகள்: பயணிகள் முகம் சுளிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்க

ஏன் இந்த அலட்சியம் : போஸ்டர்களால் அலங்கோலமாகும் நிழற்குடைகள்: பயணிகள் முகம் சுளிப்புக்கு முற்றுப்புள்ளி வையுங்க

மாவட்டத்தில் ஏராளமான பஸ் ஸ்டாப்களில் நிழற்குடைகள் உள்ள நிலையில் இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக பராமரிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அரசியல், விழா வைபவங்கள், இரங்கல்,வேலைவாய்ப்பு ,முகாம்கள் சம்பந்தமான ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இவ்வாறான போஸ்டர்கள் ஒன்றின் மீது ஒன்று ஒட்டப்படுவதால் அலங்கோலமாக குப்பை, குவியலாக காட்சியளிக்கிறது. மேலும் இதன் மீது சிலர் ஒருமையில் எழுதுவது, சித்திரங்கள் வரைவது என மேலும் சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன.துவக்கத்தில் இது போன்ற போஸ்டர் கலாசாரத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது இது குறித்து நிர்வாக ரீதியாக நடவடிக்கை என்பது இல்லை.ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் இந்நிலையை காண முடிகிறது.பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் இத்தகைய போஸ்டர் கலாசாரத்தால் முகம் சுளிக்கின்றனர். சுற்றுலாத்தலமான கொடைக்கானல், ஆன்மிக தலமான பழநி உள்ளிட்ட பகுதிகளில் இதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் போஸ்டர் ஓட்டும் கலாசாரத்தை தடை செய்து அதற்கு மாற்றாக இயற்கை, அந்தந்த பகுதி சார்ந்த அரிய காட்சிகளை ஓவியமாக இடம்பெற செய்யும் நிலையில் இத்தகைய செயல்பாடுகள் தவிர்க்கப்படும். மேலும் தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர் மீது அபராதம் விதித்தால் இந்நிலை கட்டுக்குள் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ