உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள்

தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள்

நத்தம்: -நத்தம் பகுதியில் அழகர்மலை, கரந்தமலை, சிறுமலை, பூலான்மலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், மலைக் குன்றுகளும் உள்ளது. இந்த மலைகளை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மாமரங்கள்,சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகள் ஏற்கனவே பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மலைகளில் இருந்து ஆங்காங்கே காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக மலை இறங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் முளையூர்- நரசிம்மபுரம் பகுதியில் இறங்கிய 20-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர், மர வகைகளை ஒடித்து சேதப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை