உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டு மாடுகள் உலா; கொடையில் பயணிகள் அச்சம்

காட்டு மாடுகள் உலா; கொடையில் பயணிகள் அச்சம்

கொடைக்கானல் : கொடைக்கானல் முகாமிடும் காட்டுமாடுகளால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர் . கொடைக்கானல் வன சரணாலயத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் அதிகமாக காட்டுமாடுகள் உள்ளன. வனப்பகுதியில் புல், தண்ணீரில்லாத நிலையில் கொடைக்கானல் நகரில் உலா வருகின்றன. சுற்றுலா பயணிகள் , உள்ளூர்வாசிகள் தாக்கப்பட்டு காயம் அடைகின்றனர். இதனால் அச்சத்தில் உள்ளனர்.இவற்றை கண்காணிக்க வனத்துறையால் தனி குழு அமைத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. சில தினங்களாக பஸ் ஸ்டாண்ட், வில்பட்டி பகுதியில் ஏராளமான காட்டு மாடுகள் கன்றுகுட்டியுடன் முகாமிட்டுள்ளன. அவற்றை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !