உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோடாக மாறுமா வண்டிப்பாதை

ரோடாக மாறுமா வண்டிப்பாதை

வடமதுரை: வடமதுரை பேரூராட்சி கிராமங்களான சீத்தப்பட்டி, உடையாம்பட்டி, தும்மலக்குண்டு பகுதி மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நுாற்பாலைகளுக்கு வேலைக்கு செல்ல, திண்டுக்கல் நகருக்கு பஸ்சை பிடிக்க ஆதம்ஸ் நகர் வழியே சுற்றுப்பாதையில் அதிக துாரம் பயணிக்கும் நிலை உள்ளது. வடமதுரை திருக்கண் ரோட்டில் உடையாம்பட்டி அருகில் இருந்து பிரியும் 500 மீட்டர் வண்டிப்பாதை சிக்காளிப்பட்டி ரோட்டுடன் இணைகிறது. 800 மீட்டர் வண்டிப்பாதைக்கென நிலம் அரசு பதிவேடுகளில் உள்ளரது. இந்த வழித்தடத்தை மேம்படுத்தி தார் ரோடாக மாற்றினால் பல கிராம மக்கள் பயன்பெறுவர். இப்பகுதியினர் நான்கு வழி சாலையில் எதிர்திசையில் தவறாக பயணிக்கும் போக்கும் வெகுவாக குறைந்து விபத்துக்களும் தவிர்க்கப்படும். இங்கு தார் ரோடு அமைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி