பெண்ணிடம் நகை திருட்டு
வடமதுரை: செங்குளத்துபட்டி களத்து வீட்டை சேர்ந்த மா.கம்யூ., ஒன்றிய செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான மலைச்சாமியின் மனைவி முனியம்மாள் 58. அரசு மாணவிகள் விடுதியில் சமையலராக பணிபுரிகிறார். வடமதுரையில் நடந்த சவுந்தரராஜப் பெருமாள் கோயில் தேரோட்டத்தை பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் நின்று பக்தர் கூட்டத்துடன் தரிசனம் செய்து திரும்பிய போது 4.5 பவுன் தங்க செயின் மாயமாகியிருந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.