மேலும் செய்திகள்
மரத்தில் மோதிய வேன் டிரைவருக்கு கால் முறிவு
06-Jan-2025
வேடசந்துார்: பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் செயின், நடந்து சென்றவரை மடக்கி மோதிரமும் பறிக்கப்பட்டது.ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியை சேர்ந்தவர் பாப்பாத்தி 55. சீல்நாயக்கன்பட்டி மகள் வீட்டிற்கு வந்து விட்டு வேடசந்துார் வந்தார். அங்கிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் பஸ்சில் ஏற நெரிசலில் நின்ற போது இவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க செயின் பறி போனது. இது போல் வேடசந்துார் கலைஞர் நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராமச்சந்திரன் 63 ,வடமதுரை ரோட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து சென்ற போது டூவீலரில் மாஸ்க் அணிந்து வந்த நபர் ராமச்சந்திரனை மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ. 200 எடுத்தப்படி மோதிரத்தையும் பறித்து சென்றார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Jan-2025