மகளிருக்கான ஹாக்கி
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை.,யில் மகளிருக்கான டேலன்ட் ஹன்ட் ஹாக்கி போட்டிகள் நடந்தது. பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். காந்திகிராம பல்கலை., திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, சேலம், மதுரை உள்பட 10க்கு மேற்பட்ட மாவட்டங்களை மாணவியர் பங்கேற்றனர். போட்டிகள் நாக் அவுட், லீக் அடிப்படையில் நடந்தது. சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், திண்டுக்கல் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளி 2இடமும், மணப்பாறை ஆலை மேல்நிலைப்பள்ளி 3ம் இடத்தையும், காந்திகிராம பல்கலை., அணி 4ம் இடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழா, பல்கலை., விளையாட்டு குழு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜாமைதீன் பரிசுகளை வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் சுகுமார் ஏற்பாடுகளை செய்தார்.