உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேறு கணக்கில் சேரும் மகளிர் தொகை மனு; பல கொடுத்தும் தீர்வின்றி தவிக்கும் பெண்

வேறு கணக்கில் சேரும் மகளிர் தொகை மனு; பல கொடுத்தும் தீர்வின்றி தவிக்கும் பெண்

வடமதுரை; வடமதுரையில் வேறொரு வங்கி கணக்கிற்கு செல்லும் மகளிர் உரிமைத் தொகையை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் பல மாதங்களாக பெண் பரிதவிக்கிறார்.வடமதுரை காஞ்சி பெரியவர் நகரை சேர்ந்தவர் முறுக்கு வியாபாரி முத்துப்பாண்டி மனைவி முருகேஸ்வரி 40. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து ஏற்று கொள்ளப்பட்டு மாதம் தோறும் பணம் அனுப்பப்படும் குறுந்தகவல் வந்தது. ஆனால் அவரது வடமதுரை கனரா வங்கி கணக்கிற்கு பணம் வந்து சேரவில்லை. ஆய்வு செய்தபோது கடைசியாகஒரு எண் மாறியதால் அதே வங்கியில் கணக்கு வைத்திருக்கும் காணப்பாடியை சேர்ந்த கிருஷ்ணன் என்ற வேறொருவர் வங்கி கணக்கில் பணம் செல்வது கண்டறியப்பட்டது. தவறுதலாக தனது கணக்கிற்கு வந்த தொகையை முருகேஸ்வரியிடம் கிருஷ்ணன் ஒப்படைத்து வருகிறார்.அவரும் வங்கி கணக்கு எண்ணை சரிசெய்து கொள்ளுங்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். இதையடுத்து முருகேஸ்வரி தாசில்தார், ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகங்களில் நேரடியாக மனு செய்து வங்கி கணக்கு எண் சரிசெய்யப்படாமல் உள்ளது. மனுக்கள் பெறும் அதிகாரிகள் சென்னையில் இருந்து பணம் அனுப்பப்படுவதால் அவர்கள்தான் சரி செய்ய முடியும் என பதில் கூறி அனுப்பி விடுகின்றனர். இப்பிரச்னையால் பணம் வருவது நின்று விடுமோ என்ற கவலையும் முருகேஸ்வரிடம் உள்ளது.வங்கி சீனியர் மேலாளர் உஷாராணி கூறுகையில், '' தவறுதலாக வேறு கணக்கிற்கு பணம் செல்வது குறித்து எழுத்துப்பூர்வமான கடிதம் தந்தால் அந்த பணம் இருப்பாக பிடித்து வைக்கப்படும். ஆதார் கார்டுடன் வந்தால் சரி செய்யலாம் '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை