மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
செந்துறை: செந்துறை - மாமரத்துபட்டியை சேர்ந்த தொழிலாளி தெய்வேந்திரன் 33. இவர் கடந்த அக்.17 மாலை பெரியூர்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் மரம் வெட்டி விட்டு அதை தலையில் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, பெரியூர்பட்டி பிரிவு பகுதியில் எதிர்பாராத விதமாக தலையில் வைத்து இருந்த மரங்கள் சாய்ந்ததில் கீழே விழுந்தார். அவர் மீது மரங்கள் வரிசையாக தலையில் விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.