உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உலக ஆயுர்வேதா தின ஊர்வலம்

உலக ஆயுர்வேதா தின ஊர்வலம்

திண்டுக்கல், : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை, மாவட்ட ஆயுஷ்மருந்து பாதுகாப்பு துறை இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ,உலக ஆயுர்வேதா தின விழிப்புணர்வு , ஐந்தாவது தேசிய ஆயுஷ் மருந்து பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கும் விதமாக ஊர்வலம் நடைபெற்றது . நத்தம் அரசு கலை அறிவியல் கல்லுாரி ,பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.நத்தம் அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட காச நோய் துணை இயக்குனர் டாக்டர் சந்திர பிரியா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசகர் மீனா ஏற்பாடுகளை செய்திருந்தார். இதோடு உலக ஆயுர்வேதா தினத்தை அனுசரிக்கும் விதமாக நத்தம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் ராஜாராம், டாக்டர் சிவக்குமார் துவக்கி வைத்தனர். டாக்டர் லட்சுமி பிரியா பேசினார். மாவட்ட ஆயுஷ் மருந்துபாதுகாப்புத்துறை டாக்டர் பாலமுருகன் நன்றி கூறினார். டாக்டர்கள் லட்சுமி பிரியா, கலைச்செல்வி , சிவராமகிருஷ்ணன் சிகிச்சையளித்தனர். டாக்டர்கள் மலைச்சாமி, வசந்தகுமார் கலந்து கொண்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !