மேலும் செய்திகள்
அலுவலர்களுக்கு பயிற்சி
11-Apr-2026
பழநி:பழநி சுகாதார மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது. பழநி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா தலைமையில் நடந்த இதில் மலேரியா நோய், கொசு உற்பத்தி தடுப்பதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட பூச்சியியல் வல்லுநர் தமிழ்ச்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் வருண், வட்டார சுகாதார கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். இதே போல் பாப்பம்பட்டி, அமரபூண்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கொசு ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
11-Apr-2026