முத்தாலம்மன் கோயிலில் பூஜை
நத்தம்: நத்தம் பூசாரிபட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபாராதனைகளும் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் 48வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.