கடவுள் வழிபாடே கரை சேர்க்கும் தருமபுரம் ஆதினம் பேச்சு
திண்டுக்கல்: '' கடவுள் வழிபாட்டை தொடர்ந்து செய்தால் அது நம்மை கரை சேர்க்கும் '' என தருமபுரம் ஆதினம் பேசினார்.சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ மாநில பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் மாநில தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்தது. தருமபுரம், சைலாபுரி, திருப்பையூர் ஆதினங்கள், சபரிமலை மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி, அச்சன்கோயில் ஆபரணபெட்டி தமிழக பொறுப்பாளர் ஹரிஹரன், காரைக்குடி ராமசாமி, ஐயப்ப சேவா சமாஜம் தேசிய தலைவர் சேகர், ஆலோசகர் மோஹனன், பொதுச் செயலாளர் ராஜன், அன்னதான கமிட்டி தலைவர் கிருஷ்ணப்பாசாமி, இணை பொது செயலாளர் வினாத்குமார் பங்கேற்றனர்.தருமபுரம் ஆதினம் பேசுகையில், ''மெய்ஞானம் பெற கலைஞானம் தேவை. கடவுளின் திருவடியை வழிபடுவது தான் கல்வியின் பயன். ஐயப்ப வழிபாடு வாரத்தில் ஒரு நாள், மாதத்தில் ஒரு நாள் இல்லாமல் நித்திய கடமையாக வேண்டும். கடவுள் வழிபாட்டை தொடர்ந்து செய்தால் அது நம்மை கரை சேர்க்கும்'' என்றார்.பொது செயலாளர் ராஜன் கூறியதாவது: சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் தேவஸ்தானம் இலவச உணவு அளிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் ஐயப்ப சேவா சமாஜம் உள்ளிட்ட அமைப்புகள் அன்னதானம் வழங்க தயாராக உள்ளன. தரிசனத்திற்கான ஸ்பாட் புக்கிங்கை அதிகரிக்க வேண்டும். கரிமலை பாதையாக வரும் பக்தர்களுக்கு தனி பாஸ் வழங்கி, நேரடியாக 18ம் படி ஏற வசதி செய்ய வேண்டும் என்றார்.