சித்தர்கள் ஓலைச்சுவடிகளுக்கு பூஜை
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் வடக்கு கிரி வீதியில் புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் புலிப்பாணி சித்தர்கள் எழுதிய ஓலை சுவடிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பழநி முருகன் கோயில் அடிவாரம் வடக்கு கிரி வீதி பகுதியில் புலிப்பாணி ஆசிரமம் உள்ளது. இங்கு போகர், புலிப்பாணி சித்தர்கள் எழுதிய பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆடி 18, ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஓலைச்சுவடிகளுக்கு போகர் விக்கிரகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மலர் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பங்கேற்றார்.