உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் உண்டியலில் திருடிய வாலிபர் கைது

பழநி கோயில் உண்டியலில் திருடிய வாலிபர் கைது

பழநி,: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.இக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி சில நாட்களுக்கு முன் நடந்தது. ஒரு உண்டியலில் பேப்பர் துண்டுகள் கிடந்துள்ளன. சந்தேகம் அடைந்த கோயில் ஊழியர்கள் கோயில் முன் வெளிப்பிரகாரத்தில் இருந்த உண்டியலை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு நபர் உண்டியலில் பணம் செலுத்தும் பகுதியில் பேப்பர் மூலம் தடை ஏற்படுத்தியுள்ளார். உண்டியலில் விழும் பணம் அவர் ஏற்படுத்திய தடை பகுதியில் சேர்ந்துள்ளது. அந்த பணத்தை திரும்ப எடுக்க வந்த அவரை கோயில் ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் ஒட்டன்சத்திரம் அருகே போடுவார் பட்டி மகேந்திரன் 37, என தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ.5200 ஐ பேலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை