உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பா.ஜ.,வில் இணைந்த இளைஞர்கள்

பா.ஜ.,வில் இணைந்த இளைஞர்கள்

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டி அரசு மண்டபத்தில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் பா.ஜ.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டச் செயலாளர் கார்த்திகைசாமி, மண்டல் தலைவர் மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்து, ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், நத்தம் தொகுதி பார்வையாளர் ரவிபாலா, மாவட்டத் துணைத் தலைவர் சொக்கர் உள்ளிட்ட மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்று, புதிதாக கட்சியில் இணைந்த இளைஞர்களை வரவேற்று, வாழ்த்துத் தெரிவித்தனர். நிகழ்வில் காந்திகிராம பல்கலையில் சில நாட்களுக்கு முன் எம்.பி.ஏ., பட்டம் பெற்று, துணைக்குடியரசு தலைவர் சி.பி.,ராதாகிருஷ்ணன் கைகளால் பட்டம் பெற்ற 50க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி இளைஞர்கள் பா.ஜ.,வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ