உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூன்றே வாரங்களில் விலை இரட்டிப்பான சுரைக்காய்

மூன்றே வாரங்களில் விலை இரட்டிப்பான சுரைக்காய்

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை மூன்றே வாரங்களில் இரு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.10 க்கு விற்பனை ஆனது.ஒட்டன்சத்திரம் ,சுற்றிய கிராமப் பகுதிகளில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக இருந்தால் கிலோ சுரைக்காய் ரூ.5க்கு விற்பனையானது. ஐந்து நாட்களாக அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்தும் குறைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது. வியாபாரி ஒருவர் கூறுகையில், மார்க்கெட்டுக்கு சுரை வரத்து குறைவாக உள்ளதால் விலை அதிகரித்து வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை