மேலும் செய்திகள்
இரட்டிப்பான பீன்ஸ் விலை
04-Jun-2025
ஒட்டன்சத்திரம்: மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கிலோ ரூ.1.50 க்கு விற்ற சுரைக்காய் விலை அதிகரித்து ரூ.8 க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, அரசப்பிள்ளைபட்டி, சாமியார்புதுார் மலை கிராமங்களில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.மே யில் விளைச்சல் அதிகமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து கணிசமாக அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சுரைக்காய் கிலோ ரூ.1.50க்கு விற்பனையானது. சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது. இதன் காரணமாக சுரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.8 க்கு விற்பனையானது.வியாபாரி கூறுகையில், இனி வரும் நாட்களில் வரத்தின் அடிப்படையில் விலை இருக்கும் என்றார்.
04-Jun-2025