உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரி கரையில் களைகட்டிய காணும் பொங்கல்கொடுமுடியில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்

காவிரி கரையில் களைகட்டிய காணும் பொங்கல்கொடுமுடியில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்

காவிரி கரையில் களைகட்டிய காணும் பொங்கல்கொடுமுடியில் குடும்பத்துடன் குவிந்த மக்கள்கொடுமுடி: கொடுமுடி காவிரி ஆற்றங்கரை பகுதியில், ஆண்டு தோறும் காணும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்படும். இந்நிலையில் காணும் பொங்கல் தினமான நேற்று, காவிரி ஆற்றங்கரைக்கு குடும்பத்துடன் மக்கள் வாகனங்களில் படையெடுத்தனர். ஆற்றில் குடும்பத்துடன் உற்சாகமாக குளித்தும், கடற்கரை போல அமைந்துள்ள மணலில் அமர்ந்து உணவருந்தியும் மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமியர் மற்றும் இளம்பெண்கள், ஆண்கள் பாரம்பரிய விளையாட்டுகளான நொண்டி, ஓடிப்பிடித்து விளையாடுதல், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர்.பொதுமக்கள் விழாவை கொண்டாட வசதியாக, கொடுமுடி பேரூராட்சி சார்பில், மணல்மேடு பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருந்தது. விளக்குகள் அமைத்தும் மக்களுக்கு அறிவிப்பு செய்ய ஒலிபெருக்கி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. கொடுமுடி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* கடம்பூர் செல்லும் வழியில் மலை அடிவாரத்தில் உள்ள மல்லியம்மன் கோவிலில், காணும் பொங்கல் நாளில் விழா நடப்பது வழக்கம். இந்த வகையில் நேற்று நடந்த விழாவில், கடம்பூர் மலை கிராமங்கள், சத்தியமங்கலம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.* அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணைக்கு, நுாற்றுக்கணக்கான மக்கள் நேற்று வந்தனர். நுழைவுவாயில் பகுதி பூட்டப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பலர் பர்கூர் மலைக்கு சென்றனர். தாமரைக்கரை, பர்கூர் பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி பொழுதை கழித்தனர். தாமரைக்குளம், மணியாச்சிபள்ளம் உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கும் மக்கள் சென்றனர்.கொடிவேரியில்குவிந்த ௧௦ ஆயிரம் பேர்காணும் பொங்கல் தினமான நேற்று, கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, காலை முதலே மக்கள் வரத்தொடங்கினர். மாலை வரை, ௧௦,௫௦௦ பேர் வந்தனர். தடுப்பணை வழியாக வெளியேறிய தண்ணீரில் குளித்து சென்றனர். சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் என அனைவரும் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி பொழுதை கழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை