உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆட்கொல்லி யானையால் மலை கிராமத்தில் அச்சம்எல்லை பிரச்னையால் வன அதிகாரிகள் பாராமுகம்

ஆட்கொல்லி யானையால் மலை கிராமத்தில் அச்சம்எல்லை பிரச்னையால் வன அதிகாரிகள் பாராமுகம்

ஆட்கொல்லி யானையால் மலை கிராமத்தில் அச்சம்எல்லை பிரச்னையால் வன அதிகாரிகள் பாராமுகம்கடம்பூர், :கடம்பூரை அடுத்த உகினியம் மலைகிராமத்தில் ஆட்கொல்லி ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் முகாமிட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். சத்தி புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூரை அடுத்த உகினியம் மலை கிராமத்தில் கடந்த, 16ம் தேதி இரவு தோட்டத்தில் காவல் பணியில் ஈடுபட்ட விவசாயி ராஜப்பன், யானை தாக்கியதில் பலியானார்.இந்நிலையில் அந்த யானை வனத்துக்குள் செல்லாமல், ஊருக்குள் நடமாடி வருவதால், மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியதாவது: தினமும் இருட்ட தொடங்கியதும், யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்கிறது. வனத்துறையினரிடம் பலமுறை புகாரளித்தும், யாரும் எட்டி கூட பார்ப்பதில்லை.மாலையில் வரும் யானை, காலை, 9:௦௦ மணி வரை மக்காச்சோள காட்டில் பதுங்கியும், நடமாடியும் திரிகிறது. அந்த வழியாக பைக்கில் செல்பவர்களை துரத்தி வருகிறது. இதனால் பகலிலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சமாக உள்ளது.இரண்டு வனச்சரக பகுதியில் மலை கிராமம் உள்ளதால், எந்த சரகத்தை சேர்ந்தவர்கள், யானையை விரட்டுவது என்று, அதிகாரிகள் போட்டி போட்டு, எல்லை பிரச்னையை ஒரு காரணமாக வைக்கின்றனர்.அடுத்த உயிர் பலி விழும் முன், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட, மாவட்ட வன அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி