உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்டையே இல்லாத இடத்தில் குழாய் பதிப்புஅத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் கூத்து

குட்டையே இல்லாத இடத்தில் குழாய் பதிப்புஅத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் கூத்து

குட்டையே இல்லாத இடத்தில் குழாய் பதிப்புஅத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் 'கூத்து'புன்செய்புளியம்பட்டி:அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு குழாய் பதிக்கப்பட்டு நீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.இதில் புன்செய் புளியம்பட்டி அருகே, 450 ஏக்கர் பரப்பு காவிலிபாளையம் குளம், 80 ஏக்கரிலான புங்கம்பள்ளி குளம், 60 ஏக்கரிலான நல்லுார் குளம், நொச்சிக்குட்டை குளம் என, 50க்கும் மேற்பட்டவை இணைக்கப்பட்டு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் காரப்பாடி ஊராட்சி செல்லம்பாளையம் குட்டை இணைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு குழாய்களை பதிக்காமல், அங்கிருந்து, 200 மீட்டர் தொலைவில் உள்ள நீர்வழிப் பாதையில் குழாய் பதித்து, அதிகாரிகள் கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: குட்டையே இல்லாத இடத்தில் குழாய் பதித்ததுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, செல்லம்பாளையம் பெரிய குட்டை வரை பதிக்க குழாய்கள் இருப்பில்லை என தெரிவித்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டம் முழுமை பெறாமல் முடங்கியுள்ளது. முறையாக குழாய் பதித்து செல்லம்பாளையம் குளத்துக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.அவினாசி-அத்திக்கடவு திட்ட அதிகாரிகள் கூறும்போது, செல்லம்பாளையம் குட்டை இணைக்கப்பட்டு அங்கு குழாய்கள் பதிக்கப்பட்டு அத்திக்கடவு திட்டத்தில் தண்ணீர் வந்துள்ளது. நீர்வழி பாதையில் கட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது குறித்து தகவல் இல்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள குழாய் கட்டமைப்புகளை மாற்ற முடியாது. விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் வகையில் அத்திக்கடவு நிலை-2 அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. அதில் வேண்டுமானால் விவசாயிகள் கூறியபடி, செல்லம்பாளையம் குட்டையை இணைக்க முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ