உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் லேசா லேசா; மாவட்டத்தில் அப்படிபோடு போடு!சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக அமைந்த மழை

மாநகரில் லேசா லேசா; மாவட்டத்தில் அப்படிபோடு போடு!சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக அமைந்த மழை

மாநகரில் 'லேசா லேசா'; மாவட்டத்தில் 'அப்படிபோடு போடு'!சுட்டெரித்த வெயிலுக்கு இதமாக அமைந்த மழைஈரோடு:மாநகரில் நேற்று 'லேசா லேசா' பெய்த நிலையில், மாவட்டத்தில் பல இடங்களில் 'அப்படிபோடு போடு' என்று கொட்டிய மழையால், வாட்டிய வெயில் குறைய, மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வாடிய மரம், செடி, கொடிகளுக்கும் சற்றே 'உயிர்' கிடைத்தது.ஈரோடு மாவட்டத்தில், 25 நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாகவே, 'சூரியனார்' தினமும் வெப்பத்தில் சதம் அடித்து, மக்களை வாட்ட தொடங்கி விட்டார். தாங்கும் தன்மை கொண்டவர்கள் வெயிலில் நடமாட, முடியாதவர்கள் வீட்டில் முடங்கி 'அய்யோ வெயில் கொளுத்துகிறது' என்று முனகினர்.இந்நிலையில்தான் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏப்., ௩ம் தேதி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று நண்பகலில் ஈரோடு மாநகர், புறநகரில் கருமேகங்கள் சூழ்ந்தது. மாநகரில், 11:30 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை, 20 நிமிடங்களில் ஓய்வுக்கு வந்து ஏமாற்றியது. ஆனாலும் இந்த மழைக்கே தாழ்வான பகுதிகளான மணிக்கூண்டு, ப.செ.பார்க், காளைமாடு சிலை, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில், சாலையில் மழை நீர் தேங்கியது. மழைக்கு பிறகு சூரிய பகவான் இயல்பு நிலைக்கு திரும்ப, மழை பெய்த ஊராய்யா இது? என்று மக்கள் வியப்புக்கு தள்ளப்பட்டனர்.*சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை, 11:30 மணிக்கு பலத்த காற்று வீசியது. பிறகு இடிஇடித்தது மழை கொட்ட தொடங்கியது. அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது.* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், அண்ணாமடுவு, தவிட்டுப்பாளையம், கொல்லபாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை, 8:30 மணி முதல் அரை மணி நேரம் துாறல் மழை, ஆலாம்பாளையம், மாத்துார், சின்ன மாத்துார் உட்பட பல இடங்களில், அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழையும் பெய்தது.* புன்செய் புளியம்பட்டியில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. பவானிசாகர், புளியம்பட்டி, புங்கம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மதியம், 3:௦௦ மணி வரை விட்டு விட்டு பெய்தது. * பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காடையாம்பட்டி, மேட்டூர் ரோடு, கூடுதுறை பகுதிகளில் நேற்று காலை, 8:30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. 20 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ