உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அடக்கி வாசிக்கும் தேர்தல் பிரிவு பெயரளவில் நடத்தப்படும் சோதனை

அடக்கி வாசிக்கும் தேர்தல் பிரிவு பெயரளவில் நடத்தப்படும் சோதனை

அடக்கி வாசிக்கும் தேர்தல் பிரிவு பெயரளவில் நடத்தப்படும் சோதனைஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., - நாம் தமிழர் கட்சி தவிர, அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உட்பட பல்வேறு பிரதான கட்சிகளே தேர்தலை புறக்கணித்துள்ளன. ஆனாலும் கடந்த, 7ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 பறக்கும் படை குழு, 3 நிலை கண்காணிப்பு குழு, தலா, 1 வீடியோ நிலைக்குழு, 1 வீடியோ கண்காணிப்பு குழு அறிவிக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. இதுவரை ஒன்பது பேரிடம், 12.72 லட்சம் ரூபாய் பறிமுதலாகி உள்ளது. 5 வழக்கு பதிவாகி உள்ளது.மாநகரை மட்டுமே மையமாக கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும் படை உட்பட தேர்தல் தொடர்பான சோதனை, தணிக்கைகளை காண முடியாத நிலையே உள்ளது.பல்வேறு கட்சிகள் போட்டியிடும் சூழல் ஏற்பட்டிருந்தால் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர், அவர்கள் சார்ந்த கட்சி முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்கள் வலம் வரும் நிலை ஏற்படும். அவ்வாறு இல்லாததால் நாம் தமிழர் கட்சியினர், 8 பேர் மீது மட்டும் வழக்குப்பதிவாகி உள்ளது. அதேநேரம் தி.மு.க., வாகனங்களில் கொடி கட்டியபடியும், உள்ளே தலைவர்கள் படங்கள், கட்சி சின்னத்துடனும், கட்சி கரையுடன் கூடிய பெயர் எழுதிய வாகனங்களும் சாதாரணமாக வலம் வருகின்றன.தி.மு.க., அமைச்சர் வீடு அமைந்துள்ள பெரியார் நகர், அந்தந்த பகுதி செயலாளர்கள் வீடு, அலுவலகங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதும், வலம் வருவதும், பிரசாரத்துக்கு மொத்தமாக வாகனங்கள் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. அவ்விடங்களில் தேர்தல் தொடர்பான எந்த அதிகாரிகளும் வந்து செல்வதில்லை. புகார் தெரிவிக்க ஆட்கள் இல்லாத நிலையில், தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர் மந்த கதியில் இயங்குவது, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களை உற்சாகம் இழக்க செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை