உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகாசக்தி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா

மகாசக்தி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா

மகாசக்தி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழாஅந்தியூர்:அந்தியூர் அருகே, ஆதிரெட்டியூரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் விழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.அந்தியூர் அருகே, ஆதிரெட்டியூரில் மகாசக்தி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 22ல், பூச்சாட்டுதலுடன் பண்டிகை துவங்கி, தினமும் மகாசக்தி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், பக்தர்கள் பாலாற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். முக்கிய நிகழ்வான நேற்று காலை வட்ட வடிவில் அமைந்துள்ள குண்டத்தில், அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குண்டம் இறங்கி வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை