உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹோலி ஹோலி ஹோலி... சுப லாலி லாலி லாலி...

ஹோலி ஹோலி ஹோலி... சுப லாலி லாலி லாலி...

ஹோலி ஹோலி ஹோலி... சுப லாலி லாலி லாலி...ஈரோடு:வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் ேஹாலி பண்டிகை, ஈரோட்டிலும் களைகட்டியது.ஈரோடு மாநகரில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் இந்திரா நகர், அக்ரஹார வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், தெப்பக்குளம் வீதி, வளையக்கார வீதி, திருநகர் காலனி பகுதிகளில் நேற்று காலை முதல் வீடு, தெருக்கள், பொது இடங்களில் கூட்டமாக கூடி கொண்டாடினர். பெரியவர் முதல் சிறுவர், சிறுமியர் வரை வேறுபாடின்றி வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் துாவி, பூசி, தண்ணீரில் பொடிகளை கலந்து மற்றவர்கள் மீது ஊற்றியும் கொண்டாடினர். கடை வீதிகள், அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அவர்களுடன் தொழில் செய்பவர்கள் மீதும் வண்ண பொடிகளை பூசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பொது இடங்களில் இனிப்பு வழங்கி, இசை கருவிகளை இசைத்து பாடல் பாடி நடனமாடினர். * சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுபுற பகுதி நுால் மில், விசைத்தறி குடோன், பனியன் உற்பத்தி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் நேற்று உற்சாகமாக ஹோலி கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ