சட்ட விரோத மது விற்பனைபெண் உட்பட 2 பேர் கைது
சட்ட விரோத மது விற்பனைபெண் உட்பட 2 பேர் கைது ஈரோடு:வள்ளலார் நினைவு தினமான, நேற்று முன்தினம் இரவு சூரம்பட்டி பள்ளிக்கூட பஸ் ஸ்டாப் டாஸ்மாக் கடை அருகே, 11 பிராந்தி பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த, சூரம்பட்டியை சேர்ந்த இசக்கிசிவா, 25. மீது சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.இதே போல், சுண்ணாம்பு ஓடை அருகே நேற்று முன்தினம் மாலை, ஏழு பிராந்தி பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்த, பவானி மெயின் ரோடு மொட்டை நாயக்கர் தோட்டத்தை சேர்ந்த மல்லிகா, 43, என்ற பெண்ணை, கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.