உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லைபவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லைபவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லைபவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவுபு.புளியம்பட்டி:நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி, நீர் இருப்பு, 32.8 டி.எம்.சி.,கொள்ளளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதி களில், கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால், வறட்சி நிலவுகிறது. தற்போது கோடைக்கு முன்பே, வெயில் கொளுத்துவதால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. மேலும் அணையில் இருந்து கீழ்பவானி பாசனம் மற்றும் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி பாசனத்திற்கு, 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 433 கனஅடியாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி,அணை நீர்மட்டம், 91.23 அடியாகவும், நீர் இருப்பு, 22.3 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு, 2,300 கன அடி, அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு, 700 கன அடி மற்றும் குடிநீர் தேவைக்காக, 100 கன அடி என மொத்தம் 3,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்தாண்டு, இதே நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம், 73.70 அடி, நீர் இருப்பு, 12.5 டி.எம்.சி.,யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ