மேலும் செய்திகள்
டோல்கேட்டில் மோதல் இரண்டு பேர் கைது
14-Feb-2025
கல்வி நிறுவன பஸ் மீதுகார் மோதி விவசாயி பலிகோபி:கோபி அருகே சாலையில் நின்றிருந்த, தனியார் கல்வி நிறுவனத்தின் பஸ் மீது, கார் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.கோபி அருகே பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன், 59, விவசாயி; இவர் தனது மாருதி காரில், கோபியை நோக்கி ஒத்தக்குதிரையை கடந்து நேற்று மதியம், 1:30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தாசம்பாளையம் என்ற இடத்தில், சாலையின் இடதுபுறமாக நின்றிருந்த, கோபி தனியார் கல்வி நிறுவனத்தின் பஸ் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கோவிந்தராஜன் இறந்தார். கோபி போலீசார், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய கோவிந்தராஜன் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவிந்தராஜன் மகன் தினேஷ், 33, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Feb-2025