ஒடிசா மாநில தொழிலாளி கொலைதலைமறைவு அசாம் வாலிபர் கைது
ஈரோடு:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தண்டபாணி, 30; கரூரில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்தார். சொந்த ஊருக்கு ரயிலில் செல்வதற்காக கடந்த, 3ம் தேதி ஈரோடு வந்தார். அப்போது ரயில்வே ஸ்டேஷன் முன்புற டாஸ்மாக் கடையில் மது குடித்தார். அவரிடம் அறிமுகமான நான்கு பேர் பேச்சு கொடுத்து, கஞ்சா தருவதாக கூறி, ஈரோடு ரயில்வே காலனியில் பயன்பாடற்ற ரயில்வே குடியிருப்புக்கு அழைத்து சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில், நான்கு பேரும் சேர்ந்து அவரை கொலை செய்து தப்பினர். இது தொடர்பாக விசாரித்த சூரம்பட்டி போலீசார், அசாம், ஜார்கண்ட் மற்றும் சேலத்தை சேர்ந்த என மூவரை கைது செய்தனர். கொலை தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வந்தனர்.தலைமறைவாக இருந்த அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ராகுல், 24, என்பவரை பெங்களூரில் கைது செய்தனர். போலீசாரை கண்டவுடன் தப்ப முயன்றவர், தவறி விழுந்ததில் வலது கால் எலும்பு முறிந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.