உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாயும்காங்கேயம்:காங்கேயம் நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதி-2023ன்படி, காங்கேயம் நகராட்சியில், வணிக நிறுவனத்தின் பெயர், முதலில் தமிழில் இடம் பெற வேண்டும். வேறு மொழி பயன்படுத்த விரும்பினால், ஆங்கிலத்தில் இரண்டாவதாக இடம்பெற செய்ய வேண்டும். தமிழுக்கான அளவு ஆங்கில மொழிக்கான அளவு மற்றும் பிற மொழிகளுக்கான அளவு முறையே 5:3:2 என்று அமைய வேண்டும். நகராட்சி பகுதியில் இந்த விதிமுறையை அனைத்து கடை, நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை