உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேர்மாளம் மலை கிராமத்தில் ஒற்றை யானையால் அச்சம்

கேர்மாளம் மலை கிராமத்தில் ஒற்றை யானையால் அச்சம்

கேர்மாளம் மலை கிராமத்தில் ஒற்றை யானையால் அச்சம்சத்தியமங்கலம், : தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம் அருகே உள்ள திங்களூர், காடட்டி, பேடர்பாளையம், சிக்கநந்தி உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.இரவில் யானைகள் புகுவதால், விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு யானை, இரவானால் வந்து விடுகிறது.தோட்டத்தில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துகிறது. பட்டாசு வெடித்து விரட்டினால் செல்கிறது. மறுநாள் இரவானால் வந்து விடுகிறது. இதனால் பயிர் சேதமாவதுடன், காவல் காக்கும் பணியில் உள்ள விவசாயிகள் பீதியில் உள்ளனர்.வனத்துறையினர் இரவு ரோந்தில் ஈடுபட்டு, ஒற்றை யானையை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !